FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நட்சத்திரங்களின் கதைகள்

தருமபுரி நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலய மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் 25 பேர் எழுதியிருக்கும், 25 சிறுகதைகளின் தொகுப்பு.

8 வினாடிகள் முன்பு
பகிர்:

நட்சத்திரங்களின் கதைகள்....-தொகுப்பு: பானுச்சந்தர்; பக். 114; ரூ. 130; திருவள்ளுவர் பொத்தக இல்லம், தருமபுரி-636 701, ✆ 93602 24172.

தருமபுரி நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலய மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் 25 பேர் எழுதியிருக்கும், 25 சிறுகதைகளின் தொகுப்பு.

தேர்வு செய்த கருவுக்கு ஏற்றாற்போல் கதையைக் கட்டமைத்து, அதையும் சிறுகதையாய் வடிவமைப்பது எளிதல்ல. இந்தக் கதைகளில் அவை சரியாய் செதுக்கப்பட்டிருக்கின்றன. எழுத்து நடையில் ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும் தங்களின் மையக் கருத்தை எளிதாகச் சொல்கிறார்கள் இந்தக் கதாசிரியர்கள். தொடர்ந்த வாசிப்பினாலேயே இவ்வாறு கதை வடிவமைப்புகள் எளிதாகும். கதையின் முடிவுக்கு ஏற்றவாறு, கவிதையுடன் அவற்றை நிறைவு செய்திருப்பது சுவாரஸ்யம்.

Advertisement

Advertisement

நட்பு குறித்து பேசும் "தீரா தேடல்', இயற்கையை ரசித்து வாழ்வதை சொல்லும் "கண்கள் காணும் நினைவுகள்', உளவியல் ரீதியாக கையாளப்படும் "உறங்காத இரவுகள்', இலட்சியம் குறித்து எழுதப்பட்ட "ஒரு தாயின் இலட்சியம்' என, ஒவ்வொரு கதையும் வித்தியாசமான களத்தில் பயணிக்கின்றன.

பெண் கல்வி, ஆண்- பெண் நட்பு, பெண்ணியம் ஆகிய தளங்களையும் தொட்டிருப்பதுடன், தொடங்கிய வேகத்தில் முடியும் குட்டிக் கதைகளும் இருக்கின்றன. சுவாரஸ்யங்கள் செருகப்பட்டதாக இல்லாவிட்டாலும், மாணவிகளின் இந்தக் கதை முயற்சி கசப்பின்றி கடந்து செல்வதாகவே இருக்கிறது.

கனவுகள் நிறைந்த கல்லூரிக் காலத்தில் கவிதைகள் எழுதக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கல்வியுடன் கதைகளுக்கும் நேரம் ஒதுக்கிய மாணவிகளின் முயற்சி பாராட்டுக்குரியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments