ஸ்ரீமத் பகவத் கீதை
பாண்டவர்களில் பலசாலியான பீமனும், தர்மமே உருவான தருமனும் இருக்க, போரில் வெற்றி பெற மிருக பலமும் தெய்விக அறிவும் இணைந்த அர்ஜுனனை ஏன் கிருஷ்ணர் தேர்வு செய்தார் என்பதற்கான விளக்கத்தை ஆசிரியர் தனது முன்னுரையில் விளக்கியிருக்கும் விதம் அருமை.
ஸ்ரீமத் பகவத் கீதை- பிரம்மஸ்ரீ வேணுசீனிவாசன்; பக். 512; ரூ. 450; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-600 049. ✆ 044-2650 7131.
வேதவியாசர் சஞ்சயனுக்கு ஞான திருஷ்டியை அளிக்கிறார்; போர்க்களத்து செய்தியை நேரில் பார்ப்பது போல் திருதராஷ்டிரனுக்கு சஞ்சயன் கூறத் தொடங்குகிறான்.
ஆன்மா, உடல், உயிர், மோட்சம், சுய முன்னேற்றம் என்பன உள்பட இந்த உலகில் வாழ வேண்டிய வாழ்க்கைக்குத் தேவையான எல்லா விதமான சூத்திரங்களும் அதற்கான விதிமுறைகளும், அதற்கான வழிவகைகளும் மிக கச்சிதமாக கீதை நமக்குத் தருகிறது என்பதை இந்நூல் தெளிவுபடுத்துகிறது.
Advertisement
Advertisement
ஞானம்-வீரம்-தர்மம் என்பனவற்றை எந்த இடத்தில் எவ்வாறு நிலைநிறுத்த வேண்டும், எப்படி அதைச் செயல்படுத்த வேண்டும் என்பதற்கான விளக்கங்கள் சொல்லப்பட்டு ஹிந்துக்களின் நம்பிக்கையான வேதத்தின் சாராம்சமாக பகவத் கீதை விளங்குவதை கதைகளின் மூலமும் அதில் வரும் உபதேசங்களின் மூலமும் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.
எல்லா மதங்களும் அறம் சார்ந்த கருத்துகளை இறைவனின் குரலாக போதிக்கும். அது இறைத்தூதர்கள் மூலமாக வெளிப்படும். ஹிந்து மதத்தில் இறைவனே நேரடியாக அர்ஜுனனுக்குப் போதிக்கிறார். நம் மனதின் வெவ்வேறு அடுக்குகளில் தோன்றும் எல்லா கேள்விகளுக்கும் பகவத் கீதையில் பதில் இருப்பதை இந்நூல் நமக்கு உறுதிப்படுத்துகிறது.
திருமந்திரம், விவேகசிந்தாமணி, கந்தர் அலங்காரம், திருக்குறள், பட்டினத்தார் பாடல்கள் உள்ளிட்ட அற நூல்களையும், குதம்பைச் சித்தர், தாயுமான சுவாமிகள், மாணிக்கவாசகர், ஆழ்வார்கள் உள்ளிட்டோரின் வரிகளையும் நூலாசிரியர் தன் விளக்கங்களுக்கு துணை சேர்த்திருப்பது சிறப்பு.
பாண்டவர்களில் பலசாலியான பீமனும், தர்மமே உருவான தருமனும் இருக்க, போரில் வெற்றி பெற மிருக பலமும் தெய்விக அறிவும் இணைந்த அர்ஜுனனை ஏன் கிருஷ்ணர் தேர்வு செய்தார் என்பதற்கான விளக்கத்தை ஆசிரியர் தனது முன்னுரையில் விளக்கியிருக்கும் விதம் அருமை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.