தோழர்
பின்னிணைப்பாக சுந்தரமூர்த்தி நாயனாரின் பாடல்களை வரலாற்று முறைப்படி வரிசைப்படுத்தி பட்டியலிட்டிருப்பது சிறப்பு.
தோழர் - சுந்தரமூர்த்தி நாயனாரின் சரிதம் - சத்தியப்பிரியன்; பக். 152; ரூ. 190; சுவாசம் பப்ளிகேஷன்ஸ், சென்னை -600127. ✆ 8148066645.
சிவன் மீது மனதை நெறிப்படுத்தி திருஞான சம்பந்தர் முதல் சேக்கிழார் வரை 27 சைவ அடியார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பே திருமுறை. இவ்வடியார்களில் யாருக்குமே இல்லாத சிறப்பு சுந்தரமூர்த்தி நாயனாருக்கு உண்டு. ஈசன் தனது தோழனாக சுந்தரரை எண்ணியதே அச்சிறப்பு.
சைவ மரபில் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகியோர் 'நால்வர்' என்று போற்றப்படுகின்றனர். இந் நால்வரில் சுந்தரரின் சரித்திரத்தை நாவல் வடிவில் வெளிக் கொணர்ந்துள்ளது இந்நூல். சேக்கிழார் பெரிய புராணத்தில் சுந்தரரின் சரிதத்தையே முதலாவதாகப் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
ஈசன் அடியார்களில் சுந்தரருக்கு மட்டுமே இரண்டு மாதர்களை மணந்து இறைவனின் பேரருளால் போகம், யோகம் என்ற இருநிலைகளிலும் வாழும் பாக்கியம் கிடைத்தது. இறைவனின்
அசரீரி மூலமாக 'தம்பிரான் தோழர்' என்று அழைக்கப்பட்ட பெருமையும் சுந்தரரையே சாரும் என்பதை இந்நூல் அழகாக விவரித்துள்ளது.
திருநாவலூரில் அவதரித்து, திருவெண்ணெய்நல்லூரில் திருமணக் கோலத்தில் இருந்த சுந்தரரை தடுத்தாட்கொண்டு, அரச வாழ்க்கை, வைதிக வாழ்க்கை இரண்டிலும் இருந்து, இரு மாதர்களை மணந்து, சேரமானுடன் நட்பு கொண்டு ஈசனால் கயிலாயத்துக்கு அழைத்துக்கொள்ளப்பட்ட சுந்தரரின் வாழ்க்கை வரலாற்றை இந்நூல் சுவைபட நாவல் வடிவில் அச்சில் வார்த்துள்ளது.
பின்னிணைப்பாக சுந்தரமூர்த்தி நாயனாரின் பாடல்களை வரலாற்று முறைப்படி வரிசைப்படுத்தி பட்டியலிட்டிருப்பது சிறப்பு.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.