திருக்குறள் உரைக்கோவை அறத்துப்பால்- தொகுப்பும் விளக்கமும்
பொருட்பால், இன்பத்துப்பாலுக்கு தனித்தனியே உரைக்கோவை காணும் ஆர்வத்தை தூண்டுகிறது.
திருக்குறள் உரைக்கோவை அறத்துப்பால்- தொகுப்பும் விளக்கமும் வித்துவான் வே.மகாதேவன்; இரண்டு பாகங்கள் பக். 2,758; ரூ. 1,500; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்-631 502.
திருக்குறள் இரண்டு வரிகளில் அமைந்திருந்தாலும் அது ஆலமரத்தின் விதை போன்றது. விரிப்பின் பெருகும். அந்த பெருக்கத்துக்கு அளவு கிடையாது. அது விளக்குபவரைப் பொருத்தது. அதுதான் இந்த நூலிலும் நடந்துள்ளது. அறத்துப்பால் மட்டும் இரண்டாயிரம் பக்கங்களுக்கு மேலாகச் செல்கிறது.
காஞ்சி காமகோடி பீடம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகம் பரிமேலழகர், மணக்குடவர் முதலாக பல உரையாசிரியர்கள் தந்துள்ள விளக்கங்கள், அதில் காணப்படும் சிறுசிறு வேறுபாடுகளை சுட்டிக் காட்டுவதுடன், தொகுப்பாசிரியரின் கருத்தும் நிறைவாக தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு குறள் விளக்கத்திலும் பிற இடங்களில் இடம்பெறும் இதே கருத்து அல்லது சொல்லாடல் இடம்பெறும் குறள், மற்ற தமிழ் இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் எல்லாவற்றுடனும் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
நூலாசிரியர் தமிழ் இலக்கியத்தை முழுமையாக படித்து, உணர்ந்து, கரைகண்டவராக இல்லாவிடில் இத்தகைய விரிவான புத்தகம் சாத்தியமில்லை.
திருவள்ளுவர் சமண மதத்தைச் சார்ந்தவரா அல்லது வேறு மதத்தவரா என்ற சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வலுவான சான்றுகளுடன் நுôலாசிரியர் விளக்கம் தந்துள்ளார்.
திருக்குறள் விளக்கவுரையை தொடங்கும் முன்பாக, திருவள்ளுவர் மற்றும் குறள் தொடர்பான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 1812-ஆம் ஆண்டு திருவாவடுதுறை ஆதீனம் நிதியுதவியில் ம. ஞானப்பிரகாசம் என்பவர் பதிப்பித்ததை விளக்கும் 'திருவள்ளுவரும் திருமடங்களும்' கட்டுரையும், திருவள்ளுவர் வரலாறு மற்றும் திருக்குறள் தொடர்பான பொதுச்செய்திகளும் குறிப்பிடத்தக்கவை.
உரையாசிரியர்கள் தொடர்பான சிறு குறிப்பும் அவரவர் தனித்திறன்களையும் நூலாசிரியர் மிக அழகாக விளக்கியுள்ளார்.
பொருட்பால், இன்பத்துப்பாலுக்கு தனித்தனியே உரைக்கோவை காணும் ஆர்வத்தை தூண்டுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.