மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா-பாகம் 2
திருக்குர்ஆன் வசனங்களுக்கான விரிவுரையைக் காண பல்வேறு நூல்களைப் புரட்ட வேண்டிய தேவையை இந்த நூல் குறைக்கிறது.
மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா-பாகம் 2: மூல நூலாசிரியர்: ஸாலிஹ் பின் அஹ்மத் அஷ்ஷாமீ; பக். 592; ரூ. 600; அப்துல்லாஹ் பப்ளிகேஷன்ஸ், மயிலாடுதுறை- 609 001. ✆ 99522 31434.
மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா பாகம்- 2 எனும் இந்த நூல் அல்லாஹ்வின் இறுதி இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் (ஸல்) சொற்கள், செயல்களைக் குறிக்கும் 14 ஹதீஸ் நூல்களின் தொகுப்பாக அமைந்துள்ளது. மூலநூலாசிரியர் ஸாலிஹ் பின் அஹ்மத் அஷ்ஷாமீ எழுதிய இந்த நூலை மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி தமிழாக்கம் செய்துள்ளார்.
அவர் 14 நூல்களில் உள்ள 1,14,194 ஹதீஸ்களிலிருந்து 3,291-ஆக தொகுத்து இந்த நூலில் அளித்துள்ளார். இரண்டாம் பாகத்தில் திருக்குர்ஆனில் இடம்பெற்ற அத்தியாயங்களின் சிறப்புகள், விரிவுரைகள், நபிகள் நாயகத்தின் (ஸல்) போதனைகளை வாழ்வில் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை தமிழில் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளன.
Advertisement
Advertisement
பிறருக்கு நாம் தர்மமாக அளிக்கும் பொருள் நாம் விரும்பும் பொருளைப் போன்றே இருக்க வேண்டும். பயனற்றதையோ, கெட்டுப்போனதையோ தானமாக வழங்கக் கூடாது என 606-ஆம் ஹதீஸ் போதிக்கிறது.
இப்படி வாழ்க்கைக்கு தேவையான பல உன்னதமான தத்துவங்கள் நிறைந்த நூலாக இது திகழ்கிறது. முதல் பாகம் வெளியான இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகி உள்ள இந்த நூலின் இரண்டாம் பாகம், ஒரே தொகுப்பில் திருக்குர்ஆன் இருப்பதைப்போல் ஒரே தொகுப்பில் நபி மொழிகளைக் கொண்டதாக உள்ளது.
திருக்குர்ஆன் வசனங்களுக்கான விரிவுரையைக் காண பல்வேறு நூல்களைப் புரட்ட வேண்டிய தேவையை இந்த நூல் குறைக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.