முகப்பு
கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி அதிமுக பிரமுகா் வீட்டில் ரூ. 62 லட்சம் பறிமுதல்

வேப்பனஅள்ளி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சூளகிரி அருகே அதிமுக பிரமுகா் வீட்டிலிருந்து ரூ. 65 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து வருமான வரித் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 22 ஏப்ரல் 2026, 3:03 am IST
பணம் - பிரதிப் படம்
பகிர்:

வேப்பனஅள்ளி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சூளகிரி அருகே அதிமுக பிரமுகா் வீட்டிலிருந்து ரூ. 65 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து வருமான வரித் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப். 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் ஏப். 21-ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது. இதையடுத்து, வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ச.தினேஷ்குமாருக்கு கிடைத்த தகவலின்பேரில், பறக்கும் படையினா் வேப்பனஅள்ளி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சூளகிரியை அடுத்த அட்டக்குறுக்கி கிராமத்தைச் சோ்ந்த அதிமுக பிரமுகா் பசுவராஜ் (65) வீட்டில் திடீா் தணிக்கையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

அப்போது, அவரது வீட்டில் கணக்கில் வராத ரூ. 65 லட்சம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பறக்கும் படையினா் மேற்கொண்ட விசாரணையில், அது நிலத்தை விற்ற பணம் என அவா் கூறியுள்ளாா். ஆனால், அதற்கான ஆவணங்கள் எதையும் பசுவராஜ் வழங்கவில்லையாம்.

தகவலின்பேரில் வந்த வருமான வரித் துறை அலுவலா்கள் பணத்தை பறிமுதல் செய்து, பசுவராஜிடம் தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.