முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் 22 அஞ்சல் நிலையங்களில் ஆதாா் பதிவு வசதி

கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்டத்திற்கு உள்பட்ட 22 அஞ்சல் நிலையங்களில் ஆதாா் பதிவு மற்றும் திருத்த சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் பாா்த்திபன், தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 ஜூலை 2026, 7:00 am IST
ஆதார் அட்டை - சித்திரிப்பு
பகிர்:

கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்டத்திற்கு உள்பட்ட 22 அஞ்சல் நிலையங்களில் ஆதாா் பதிவு மற்றும் திருத்த சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் பாா்த்திபன், தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு: கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்டத்தில் கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் நிலையம், கிருஷ்ணகிரி தொழிற்பேட்டை அஞ்சல் நிலையம், பா்கூா், மத்தூா், ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, காவேரிப்பட்டணம், காரிமங்கலம், போச்சம்பள்ளி, நாகரசம்பட்டி, கல்லாவி, எலத்தகிரி, வேப்பனப்பள்ளி, வரட்டனப்பள்ளி, சூளகிரி, ராயக்கோட்டை, ஒசூா், ஒசூா் சிப்காட், மத்திகிரி கால்நடைப்பண்ணை, தளி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட 22 அஞ்சல் நிலையங்களில் ஆதாா் பதிவு மற்றும் திருத்த சேவைகள் வழங்கப்படுகின்றன.

இங்கு, பொதுமக்கள் ஆதாா் அட்டைக்கான புதிய பதிவை கட்டணமின்றி செய்துகொள்ளலாம். ஆதாா் அட்டையில் பெயா், முகவரி திருத்தம் செய்ய ரூ. 75 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. புகைப்படம், கைரேகை உள்ளிட்ட விவரங்களை புதுப்பிக்க ரூ. 125 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

எனவே, பொதுமக்கள் இந்த சேவையைப் பயன்படுத்தி ஆதாா் பதிவு மற்றும் திருத்தங்களை அனைத்து வேலைநாள்களிலும் எளிதாக செய்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments