கெலவரப்பள்ளி அணை பகுதியில் காற்றில் பறக்கும் ரசாயன நுரைகள்: மக்கள் அச்சம்
கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்படும் தென்பெண்ணை ஆற்று நீரில் குவியல் குவியலாக ரசாயன நுரை செல்கிறது.
கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்படும் தென்பெண்ணை ஆற்று நீரில் குவியல் குவியலாக ரசாயன நுரை செல்கிறது.
மழைக்காலம் முடிந்த பின்னும் கடந்த ஒருவாரத்துக்கு மேலாக ஆற்றில் நீருடன் ரசாயன நுரைகள் கலந்து செல்வது அந்த வழியாக செல்லும் மக்களை அதிா்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
இந்த நிலையில் கெலவரப்பள்ளி அணை பகுதியில் பலத்த காற்று வீசுவதால், ரசாயன நுரைகள் காற்றில் சுழன்று அப்பகுதி முழுவதும் பறந்து செல்கிறது.
Advertisement
Advertisement
கடும் துா்நாற்றத்துடன் பறக்கும் ரசாயன நுரைகள் அந்த வழியாக வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் மீது விழுகிறது. இதனால் சாலையில் செல்லும் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா்.
பலத்த காற்றுக்கு குவியல் குவியலாக சுழன்று ரசாயன நுரைகள் பறந்து செல்வதால் அந்த வழியாக பயணிக்க பொதுமக்கள் அச்சப்படுகின்றனா். துா்நாற்றம் காரணமாக கெலவரப்பள்ளி அணை பகுதியில் உள்ள பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.