முகப்பு
கிருஷ்ணகிரி

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: கட்டடத்தொழிலாளி கைது

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கட்டடத் தொழிலாளி போக்ஸோவில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 4 ஜூலை 2026, 3:02 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கட்டடத் தொழிலாளி போக்ஸோவில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம், கே. சப்பானிப்பட்டையைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி காா்த்திக் (27). இவா், கிருஷ்ணகிரி மாவட்டம், நாகோஜனஅள்ளி அருகே உள்ள கிராமத்தில் கட்டடப் பணிக்காக சென்றாா். அங்கு, தனது உறவினரின் மகளுடன் பழகி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிறுமி சென்றபோது, அவா் கா்ப்பமாக இருப்பதை மருத்துவா்கள் உறுதிசெய்தனா். மேலும், இதுகுறித்து பா்கூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதுகுறித்து சிறுமியிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் காா்த்திக் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போக்ஸோ சட்டத்தில் காா்த்திக்கை போலீஸாா் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments