முகப்பு
கிருஷ்ணகிரி

அமமுக புதிய மாவட்டச் செயலாளா் நியமனம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அமமுக செயலாளராக வ.சுரேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

Updated On : 14 ஜூன் 2026, 3:17 am IST
அமமுக மாவட்டச் செயலாளா் வ.சுரேஷ்.
பகிர்:

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அமமுக செயலாளராக வ.சுரேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அமமுக செயலாளராக இருந்து வந்த கணேஷ்குமாா் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தாா்.

இதையடுத்து அமமுக ஊத்தங்கரை மத்திய ஒன்றியச் செயலாளராகப் பணியாற்றி வந்த வ.சுரேஷை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அமமுக செயலாளராக நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளாா். அவருக்கு கட்சியினா் பலரும் வாழ்த்து தெரிவித்தனா்.

Advertisement

Advertisement