சட்டத் துறையின் முதல் பெண் செயலராக ப. சுமதி நியமனம்!
சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக பெண் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து...
சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டத் துறையின் செயலாளராக கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்த சி.ஜார்ஜ் அலெக்சாண்டர் அரசு பணியிலிருந்து மே 31 ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார்.
அவரது ஓய்வைத் தொடர்ந்து, மாநில சட்ட ஆணையத்தின் முழுநேர உறுப்பினர் செயலாளராக பணியாற்றி வந்த ப. சுமதி, ஜூன் 2 ஆம் தேதி முதல் சட்டத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
இந்நியமனத்தின் மூலம், சட்டத் துறையின் செயலாளர் பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையை ப. சுமதி பெறுகிறார். இது சட்டத் துறையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
P. Sumathi Appointed as the First Woman Secretary of the Law Department
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.