FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை! மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிவு...

மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:

தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

தவெக ஆட்சிக்கு வந்த பிறகு நடக்கும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன.

இந்நிலையில் சென்னை அடையாறில் இந்திரா நகர் பகுதியில் நேற்று பட்டப்பகலில் 3 பேர் கொண்ட கும்பல், மைத்ரேயன் என்ற ரௌடியை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுதொடர்பான விடியோ காட்சி வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக 2 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். மைத்ரேயன் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு பின்னர் ஆட்டோவில் திரும்பும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்,

"சிறை, பள்ளி, சாலை, நீதிமன்றம் என எங்கும் பாதுகாப்பில்லை!

இதைப் பற்றி எல்லாம் முதலமைச்சருக்கு அக்கறை இல்லை. அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் இல்லை. குற்றவாளிகளுக்கு பயமில்லை.

த.வெ.க. ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை!" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

summary

DMK leader M.K. Stalin post on law and order in Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments