முகப்பு
கிருஷ்ணகிரி

வீட்டின் முன் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் திருட்டு

வீட்டின் முன் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 26 ஜூன் 2026, 6:14 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

வீட்டின் முன் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஒசூா், அண்ணாமலை நகா் பகுதியைச் சோ்ந்த ஹரி (27), தனியாா் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறாா். இவா் கடந்த 2019-ஆம் ஆண்டு ரூ. 2.5 லட்சத்தில் வாங்கிய இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் புதன்கிழமை இரவு நிறுத்தி இருந்தாா்.

பின்னா், வியாழக்கிழமை காலை எழுந்து பாா்த்தபோது வாகனம் இல்லாததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, மா்ம நபா் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments