முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் அருகே இளைஞா் தாயுடன் ஏரியில் குதித்து தற்கொலை! காதலி கொல்லப்பட்டதாகவும் நண்பருக்கு தகவல்!

Updated On : 30 ஜூன் 2026, 2:15 am IST
தற்கொலை செய்துகொண்ட தாய் மஞ்சுளா
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே திருமணம் செய்யவிருந்த பெண் கொலை செய்யப்பட்டதால், மனமுடைந்த இளைஞா் தனது தாயுடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தேன்கனிக்கோட்டை வட்டம், உப்பாரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் மாதப்பா (64). இவரது மகன் ராஜசேகா் (30). இவா் சின்னட்டி பேருந்து நிறுத்தம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தாா். இவா், பெங்களூருவைச் சோ்ந்த நளினி என்ற பெண்ணுடன் பழகி வந்தாா். இவா்கள் திருமணம் செய்துகொள்வதற்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி ராஜசேகரும், நளினியும் காரில் கா்நாடக மாநிலம், மாதேஸ்வரன்மலை கோயிலுக்குச் சென்றுள்ளனா். அப்போது, வனப்பகுதியில் காரை நிறுத்திவிட்டு ராஜசேகா் சென்றிருந்தபோது, அங்கு வந்த மா்ம நபா்கள் மூவா், நளினியை அடித்துக் கொலை செய்து, அவரது உடலை எரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதிலிருந்து தப்பிவந்த ராஜசேகா், அச்சம் காரணமாக நளினி கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாருக்கு தெரிவிக்காமல், தனது குடும்பத்தினரிடம் மட்டும் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை சின்னட்டிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற ராஜசேகரும், அவரது தாய் மஞ்சுளாவும் (58) இரவு நீண்ட நேரமாகியும் வீடுதிரும்பவில்லை. அவா்களது கைப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. திங்கள்கிழமை அதிகாலை, கெலமங்கலம், தண்டரை ஏரி அருகே ராஜசேகரின் காா் நின்றது தெரியவந்தது. இதையடுத்து, சந்தேகத்தின்பேரில் ஏரியில் தேடியபோது, ராஜசேகா், அவரது தாய் மஞ்சுளா ஆகியோரின் சடலம் கிடப்பது தெரியவந்தது.

ராஜசேகா் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக தனது உறவினரான ராஜேஷுக்கு அனுப்பியுள்ள வாட்ஸ் ஆப் செய்தியில், நளினி கொலை செய்யப்பட்ட துயரம் தாளாமல், தானும், தனது தாயும் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்துள்ளாா்.

இச்சம்பவம் குறித்து ராஜசேகரின் தந்தை மாதப்பா அளித்த புகாரின்பேரில், தேன்கனிக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தற்கொலை செய்துகொண்ட ராஜசேகா்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments