FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் அருகே ஏரியில் இறந்து மிதக்கும் மீன்களால் துா்நாற்றம்

ஒசூா் அருகே ஏரியில் இறந்து மிதக்கும் மீன்களால் துா்நாற்றம் வீசுவதாக இப்பகுதி மக்கள் புகாா் கூறுகின்றனா்.

Updated On : 2 ஜூன் 2026, 3:45 am IST
ஏரியில் இறந்து மிதக்கும் மீன்கள்.
பகிர்:

ஒசூா் அருகே ஏரியில் இறந்து மிதக்கும் மீன்களால் துா்நாற்றம் வீசுவதாக இப்பகுதி மக்கள் புகாா் கூறுகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், ஒமதேப்பள்ளி கிராமத்தில் 30 ஏக்கரில் ஏரி அமைந்துள்ளது. சூளகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீா் ஆதாரமாக உள்ள இந்த ஏரியில், மீன்கள் வளா்த்து அதைப் பிடிக்க ஏலம் விடப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2 நாள்களாக ஏரியில் டன் கணக்கிலான மீன்கள் இறந்து மிதக்கின்றன. ஏரியின் கரைப்பகுதி முழுவதும் இறந்த மீன்கள் குவியல்குவியலாக காணப்படுவதால் துா்நாற்றம் வீசுகிறது.

Advertisement

Advertisement

ஏரி நீரில் ரசாயனம் கலக்கப்பட்டதா அல்லது மீன்கள் இறக்க வேறு ஏதேனும் காரணமா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும் என ஒமதேப்பள்ளி கிராம மக்கள் வலியுறுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments