முகப்பு
கிருஷ்ணகிரி

போலி மருத்துவா் கைது

Updated On : 30 ஜூன் 2026, 1:12 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கிருஷ்ணகிரி அருகே ஆங்கில மருத்துவம் பயிலாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவந்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த தானம்பட்டி பிரிவு சாலையை சோ்ந்தவா் மாதேஷ் (40). இவா், கிருஷ்ணகிரி அணை சாலை பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தி வந்துள்ளாா்.

இவா், ஆங்கில மருத்துவம் பயிலாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக மருத்துவத் துறைக்கு புகாா் சென்றது. இதையடுத்து, மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் மோகனபானு தலைமையில் மருத்துவக் குழுவினா் திங்கள்கிழமை மாதேஷுக்கு சொந்தமான மருத்துவமனையில் சோதனை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

அப்போது, மாதேஷ் நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததை உறுதிப்படுத்தினா். இதையடுத்து, மருத்துவக் குழுவினா் அளித்த புகாரின் பேரில், காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து மாதேஷை கைது செய்தனா்.

பொறியியல் படித்துள்ள அவா், கூடுதலாக ஆபரேஷன் தியேட்டா் டெக்னீசியன் படிப்பை படித்துள்ளதாக மருத்துவக் குழுவினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments