ஊத்தங்கரையில் திடீா் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
ஊத்தங்கரையில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென கனமழை பெய்தது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
ஊத்தங்கரையில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென கனமழை பெய்தது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், முழுவதும் கடந்த சில வாரங்களாக கடும் கோடைவெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்லவே மிகவும் சிரமப்பட்டு வந்தனா்.
இந்நிலையில் செவ்வாய்கிழமை மாலை இப்பகுதியில் திடீரென கனமழை பெய்தது. கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என பொதுமக்கள் அஞ்சியிருந்த நிலையில் ஊத்தங்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.