முகப்பு
நாமக்கல்

காவிரி பாலம் அருகே விபத்து: போக்குவரத்து பாதிப்பு

பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே புதன்கிழமை அடுத்தடுத்து நான்கு சொகுசு கார்கள் மோதிய விபத்தில், கரூர்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On : 5 ஏப்ரல் 2018, 7:15 am IST
பகிர்:

பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே புதன்கிழமை அடுத்தடுத்து நான்கு சொகுசு கார்கள் மோதிய விபத்தில், கரூர்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பரமத்தி வேலூரில் இருந்து கரூர் நோக்கி சென்ற தனியார் தங்கும் விடுதியைச் சேர்ந்த கிரி என்பவரது கார் திடீரென பழுதாகி கரூர்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் காவிரி பாலம் அருகே நின்றது. இதைத் தொடர்ந்து, பெங்களூரில் இருந்து கரூர் மற்றும் மதுரை நோக்கி பின்னால் வந்த இரண்டு கார்களும், சேலத்தில் இருந்து கரூர் நோக்கி சென்ற மற்றொரு காரும் மோதிக்கொண்டன. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் வந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து காரணமாக கரூர்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments