உணவுத் தொழில் செய்பவர்கள் உரிமம் பதிவு பெற ஆன்லைனில் கட்டணம் செலுத்தலாம்
உணவு தொழில் செய்பவர்கள் வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் உரிமம் பதிவு பெற ஆன்லைனில் கட்டணம் செலுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் தெரிவித்தார்.
உணவு தொழில் செய்பவர்கள் வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் உரிமம் பதிவு பெற ஆன்லைனில் கட்டணம் செலுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
உணவு வணிகம் மேற்கொள்பவர்களுக்காக இந்தியா முழுவதும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006-இல் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் 5.8.2011 முதல் அமலுக்கு
வந்தது. இச் சட்டத்தின் கீழ் உணவு வணிகம் மேற்கொள்ளும் அனைத்து உணவு வணிகர்களும் உரிமம் அல்லது பதிவு செய்தல் அத்தியாவசியம். நாமக்கல் மாவட்டத்தில் மொத்த உணவு வணிக நிறுவனங்கள் 17,207. இதில் 96 சதவீதம் பேர் உரிமம் பெற்றுள்ளனர். மீதமுள்ள 4 சதவீதம் உணவு வணிக நிறுவனங்கள் உரிமம் கட்டாயம் பெற வேண்டும்.
முன்பு உரிமம் பெற செலுத்து சீட்டின் மூலம் கருவூலத்தில் சீல் வைத்து, பாரத ஸ்டேட் வங்கியில் பணம் செலுத்தி அதன் பிறகு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் இருந்து விண்ணப்பம் பதிவு ஏற்றம் செய்யப்படும் போது, உரிமம் பதிவுக்கான கட்டணம் ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும். மேலும் வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் கட்டாயம் ஆன்லைன் மூலமாகதான் உரிமம் பதிவு பெற கட்டணம் செலுத்த வேண்டும். உணவுப் பாதுகாப்பு துறையின் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் பெறாமல் உணவு வணிகம் மேற்கொள்வது சட்டப்படி குற்றம்.
எனவே, உணவு வணிகர்கள் தாங்களே முன்வந்து உடனடியாக தங்களது வணிகத்திற்கு உரிமம் அல்லது பதிவுச்சான்றிதழ் பெற்றிடவேண்டும். தவறினால் உணவுப் பாதுகாப்பு தரங்கள் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், உரிமம் தொடர்பான விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட நகர, ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலர்களையோ, மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.