ராசிபுரம் நகரில் லாட்டரி சீட்டு விற்றதாக ஊழியர்கள் இருவர் கைது
ராசிபுரம் நகரில் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக லாட்டரி
ராசிபுரம் நகரில் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக லாட்டரி மொத்த விற்பனையாளர்களின் ஊழியர்கள் இருவர் திங்கள்கிழமை போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில், அதிக அளவில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் உள்ளன. இந்நிலையில் ராசிபுரம் நகர வங்கி தெருவில் லாட்டரி விற்பனை மையங்களுக்கு வந்த இளைஞர்களுக்கும், அப்பகுதி குடியிருப்போர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து லாட்டரி விற்பனை மையங்களை அப் பகுதியினர் தாழிட்டுப் போராட்டம் நடத்தியதால், போலீஸார் வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து அப் பகுதியினர் கூறிய புகாரின்பேரில் ராசிபுரம் நகர போலீஸார் லாட்டரி மொத்த விற்பனையாளர்களிடம் பணியாற்றும் ஊழியர்கள் இருவரைக் கைது செய்தனர்.
இதில் மூலப்பள்ளிப்பட்டி கட்டபுளியமரம் பகுதியை சேர்ந்த சுந்தரம் என்பவர் மகன் பழனிசாமி (35), கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதேபோல் மற்றொரு ஊழியர் கட்டனாச்சம்பட்டி அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மகன் பழனிசாமி (45) லாட்டரி சீட்டு விற்றதாக வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.