குமாரபாளையத்தில் தாழ்வான பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றம்: காவிரியில் வெள்ளப்பெருக்கால் அதிகாரிகள் திடீர் நடவடிக்கை
குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் காவிரி ஆற்றின் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் உடமைகளுடன் ஞாயிற்றுக்கிழமை
குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் காவிரி ஆற்றின் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் உடமைகளுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியேற்றப்பட்டு, மேடான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டனர்.
மேட்டூர் அணைக்கு கர்நாடக மாநிலத்திலிருந்து வரும் வெள்ளப் பெருக்கால் நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால், மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு வெளியேற்றப்பட்ட நீரின் அளவானது விநாடிக்கு 20 ஆயிரம் கன அடியிலிருந்து 30 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதால், காவிரிக் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந் நிலையில், குமாரபாளையம் வட்டாட்சியர் ஆர்.ரகுநாதன் தலைமையில் குமாரபாளையம், பள்ளிபாளையம் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய ஒலிபெருக்கியின் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், குமாரபாளையம் மணிமேகலைத் தெரு பகுதியில் கரையோரத்தில் வசித்தவர்கள் மேடான பகுதிகளுக்கு உடமைகளுடன் வெளியேற்றப்பட்டனர்.
மேலும், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் பாதிக்கப்படுவோர் தங்க புத்தர் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந் நடவடிக்கையில், நகராட்சி ஆணையர் ஆர்.மகேஸ்வரி, சுகாதார ஆய்வாளர் குமரவேல் மற்றும் அலுவலர்கள் ஈடுபட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.