முகப்பு
நாமக்கல்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் புறநகர செயற்குழுக் கூட்டம்

மாணிக்கம்பாளையம் பகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் புறநகர செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 

Updated On : 5 நவம்பர் 2018, 8:54 am IST
பகிர்:

மாணிக்கம்பாளையம் பகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் புறநகர செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார்.  மாவட்டச் செயலாளர் பூபதி வரவேற்றுப் பேசினார். 
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பேசினார்.  கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது,  தீபாவளி அன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. இது நடைமுறைக்கு ஒத்துவராத தீர்ப்பு. கிராமப்புறங்களில் பட்டாசு வெடிப்பதை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பால் கூட்டுறவு சங்கங்களில் பால் உற்பத்தியாளர்களிடம் பட்டாசுகளை அதிக விலைக்கு கட்டாயப்படுத்தி கொடுப்பதாக செய்திகள் வந்துள்ளன. இதனை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது எனத் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments