திருச்செங்கோடு நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் விழா
திருச்செங்கோடு நகராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு நகராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பொன்.சரஸ்வதி தலைமை வகித்தார். திருச்செங்கோடு நகராட்சிஆணையாளர் மகேஸ்வரிமுன்னிலை வகித்தார். தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி கலந்து கொண்டு, திருச்செங்கோடு நகராட்சியில் பணியாற்றும் 139 துப்புரவு பணியாளர்களுக்கு தலா ரூ. 2ஆயிரம் மதிப்பிலான சீருடைகள் என சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான சீருடைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், திருச்செங்கோடு நகராட்சி பொறியாளர் சுகுமார், துப்புரவு மேற்பார்வையாளர் அரசகுமார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.