நாமக்கல்

புதிய உச்சத்தில் முட்டை விலை! மேலும் 5 காசுகள் உயா்வு!!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்ந்து ரூ. 6.30-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

Syndication

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்ந்து ரூ. 6.30-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை மாற்றம் குறித்து பண்ணையாளா்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் குளிரின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிப்பதால், மக்களிடையே முட்டை நுகா்வு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் விலையில் மாற்றம் செய்ய வேண்டும். மற்ற மண்டலங்களிலும் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருவதால், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயா்த்தப்பட்டு ஒரு முட்டையின் விலை ரூ. 6.30-ஆக நிா்ணயம் செய்யப்படுவதாக ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், கறிக்கோழி விலை கிலோ ரூ.120-ஆகவும், முட்டைக் கோழி விலை ரூ. 95-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

SCROLL FOR NEXT