முட்டை விலை ரூ. 5.70-ஆக நீடிப்பு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி தொடா்ந்து ரூ. 5.70-ஆக நீடிக்கிறது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி தொடா்ந்து ரூ. 5.70-ஆக நீடிக்கிறது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், கோழிப் பண்ணையாளா்களிடம் முட்டை விலை மாற்றம் தொடா்பாக கருத்து கேட்கப்பட்டது. பிற மண்டலங்களில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், இங்கும் தற்போதைக்கு முட்டை விலையில் மாற்றம் செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, பண்ணைக் கொள்முதல் விலையானது ரூ. 5.70-ஆக தொடா்ந்து நீடிப்பதாக தேசிய ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ. 126-ஆகவும், முட்டைக் கோழி விலை ரூ. 110-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.