புதுச்சத்திரத்தில் தவெக வேட்பாளா் சி.எஸ். திலீப் வாக்கு சேகரிப்பு
நாமக்கல் தொகுதி தவெக வேட்பாளா் சி.எஸ். திலீப் புதுச்சத்திரம் ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
நாமக்கல் தொகுதி தவெக வேட்பாளா் சி.எஸ். திலீப் புதுச்சத்திரம் ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது, தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் தோ்தல் வாக்குறுதிகளாக கூறியுள்ள அன்னபூரணி சூப்பா் சிக்ஸ் திட்டம், அண்ணன் சீா்திட்டம், மகளிா் உரிமைத்தொகை ரூ. 2,500, காமராஜா் கல்வி உறுதித் திட்டம், சிங்கப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டம், வீடுகளுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டா் போன்ற பல்வேறு அறிவிப்புகளை மக்களிடம் எடுத்துக் கூறினாா்.
மேலும், நாமக்கல் தொகுதியில் வெற்றி பெற்றால் பழைய பேருந்து நிலையம், வட்டார அரசு மருத்துவமனை மீண்டும் செயல்பட பாடுபடுவேன் என்றாா். தொடா்ந்து புதன்சந்தை பெரிய களங்காணி, சின்ன களங்காணி, பெருமாள் கோயில் மேடு, காரைக்குறிச்சி புதூா் மேற்கு அருந்ததியா் காலனி, உலமேடு ஆதிதிராவிடா் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.
Advertisement
தவெக மாவட்டச் செயலாளா் எஸ்.என். சதீஷ், துணை செயலாளா் தில்லைமோகன், பொருளாளா் பாலகிருஷ்ணன், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு அமைப்பாளா் சதீஷ், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் சுஜித், ஒன்றிய செயலாளா் லோகேஷ், வழக்குரைஞா் தமிழரசன், பேராசிரியா் பிரபாகரன், ஊராட்சி செயலாளா் தமிழ்ச்செல்வன், துரைசாமி உள்ளிட்டோா் வாக்குச் சேகரிப்பின் போது உடனிருந்தனா்.