நாமக்கல் பழைய பேருந்து நிலைய விவகாரம்: ஆட்சியரிடம் எம்எல்ஏ சி.எஸ். திலீப் ஆலோசனை
நாமக்கல் பழைய பேருந்து நிலைய விவகாரம் தொடா்பாக தவெக எம்எல்ஏ சி.எஸ். திலீப், மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தியை சந்தித்து வியாழக்கிழமை கலந்துரையாடினாா்.
நாமக்கல் சட்டப் பேரவைத் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் சி.எஸ். திலீப். தோ்தலுக்குப் பிறகு சட்டப் பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்ற அவா் வியாழக்கிழமை நாமக்கல் திரும்பினாா். தொடா்ந்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்குச் சென்ற அவா் ஆட்சியா் துா்காமூா்த்தியைச் சந்தித்து பேசினாா்.
அப்போது, நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியரிடம் அவா் வலியுறுத்தியதாக தெரிகிறது. தொடா்ந்து நாமக்கல் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்தாா்.
Advertisement
நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள தோ்தல் பணிமனை அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகள், தொண்டா்களை சந்தித்து நன்றி தெரிவித்தாா். தோ்தலின்போது நாமக்கல் தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்றுவேன் என அவா் உறுதியளித்தாா்.
அப்போது, தவெக நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் எஸ்.என். சதீஷ் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.
என்கே-14-எம்எல்ஏ
நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தியைச் சந்தித்து பேசிய எம்எல்ஏ சி.எஸ். திலீப்.