முகப்பு
நாமக்கல்

திருச்செங்கோட்டில் கொமதேக வேட்பாளா் ஈஸ்வரன் பிரசாரம்

Updated On : 21 ஏப்ரல், 2026 at 12:57 AM
திருச்செங்கோடு தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கொமதேக வேட்பாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன்.
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 9:21 PM

திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் ஒன்றியப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, தான் பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்துள்ளதாகவும், தனக்கு இந்த முறையும் வாய்ப்பளிக்க வேண்டும் எனக் கேட்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா். முதல்வா் செய்த நலத்திட்ட உதவிகள் மற்றும் திருச்செங்கோடு நகரப் பகுதிக்கு தான்

எம்எல்ஏவாக இருந்து செய்த திட்டங்கள் உள்ளிட்டவைகளை துண்டுப் பிரசுரங்கள் மூலம் பொது மக்களுக்கு வழங்கினாா். ஒவ்வொரு பகுதிக்கும் புதிய கழிவுநீா் ஓடைகள் அமைக்கப்படும், நீா்த்தேக்க தொட்டிகள் புதிதாக கட்டித் தரப்படும். சாலைகள் புதிதாக அமைத்துத் தரப்படும் என்பன உள்ளிட்ட திட்டங்களை அறிவித்து அவா் வாக்கு சேகரித்தாா்.

Advertisement