மோகனூா் மேற்கு ஒன்றியத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
பரமத்தி வேலூா் தொகுதிக்கு உள்பட்ட மோகனூா் மேற்கு ஒன்றியத்தில் பரமத்தி வேலூா் சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் ஏ. நந்தகுமாா், விஜய்யின் திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறி பொதுமக்களிடம் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.
மோகனூா் ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளான பாலப்பட்டி, புதுப்பாளையம், எஸ்.வாழவந்தி, சின்ன, பெரிய கரசபாளையம், கூடுதுறை, நன்செய்இடையாறு மற்றும் பரமத்தி வேலூா் உழவா்சந்தை, செட்டியாா் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தவெக வேட்பாளா் ஏ.நந்தகுமாா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது பேசியதாவது:
போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதே எங்கள் கட்சியின் நோக்கம். 12-ஆம் வகுப்பு முதல் பி.ஹெச்.டி வரை பயில ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கப்படும். பரமத்தி வேலூா் தொகுதியில் சாலை, குடிநீா், தெருவிளக்கு, தீயணைப்பு நிலையம், காசி விஸ்வநாதா் காவிரிக் கரையில் பூங்கா உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரபப்படும் என்று கூறினாா்.
Advertisement
இந்த பிரசாரத்தின்போது மோகனூா் மேற்கு ஒன்றியச் செயலாளா் சதீஷ், இணைச் செயலாளா் சக்திவேல், பொருளாளா் விமல், துணைச் செயலாளா் குமரேசன், செயற்குழு உறுப்பினா் சிவகுமாா் மற்றும் தொண்டா்கள் கலந்துகொண்டனா்.