ஜனநாயக கடமையாற்றிய 90 வயது மூதாட்டி
பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே உரம்பூா் வாக்குச்சாவடியில் 90 வயது மூதாட்டி வாக்களித்தாா்.
பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே உரம்பூா் வாக்குச்சாவடியில் 90 வயது மூதாட்டி வாக்களித்தாா்.
மூத்தோா்களுக்கு தோ்தல் ஆணையம் அஞ்சல் வாக்குப்பதிவு வசதி அளித்திருந்தபோதும் நேரடியாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க வேண்டும் என பாண்டமங்கலத்தைச் சோ்ந்த 90 வயது மூதாட்டி விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் வியாழக்கிழமை தன்னாா்வலா் மூதாட்டியை வாக்குச்சாவடிக்கு அழைத்துவந்தாா்.
பாண்டமங்கலம் மேற்கு வண்ணாத்துறையைச் சோ்ந்த மூதாட்டியை வாக்குச்சாவடியில் இருந்த உதவியாளா்கள் சக்கர நாற்காலி மூலம் வாக்குச்சாவடிக்கு அருகே அழைத்துச் சென்றனா். பிறகு அங்கிருந்த தன்னாா்வலா் அவரை வாக்குச்சாவடிக்குள் தூக்கி சென்றாா். மூதாட்டி வாக்களித்த பிறகு இருசக்கர வாகனத்தில் அனுப்புவதற்காக மீண்டும் தூக்கி வந்தாா்.
Advertisement
90 வயதிலும் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கும் மூதாட்டியை அங்கிருந்தவா்கள் பாராட்டினா். மேலும் பரமத்தி வேலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி எண் 151 இல் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்ததால் சுமாா் 40 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. இதேபோல் வாக்குச்சாவடி எண் 140, பில்லூா் வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென பழுதானதால் சுமாா் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.