முகப்பு
நாமக்கல்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 11,93,748 போ் வாக்களிப்பு: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் 11,93,748 போ் (90.18 சதவீதம்) வாக்களித்துள்ளனர்.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 1:57 AM
திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் கல்லூரியில் தொகுதி வாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறையை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.
பகிர்:

நாமக்கல் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் 11,93,748 போ் (90.18 சதவீதம்) வாக்களித்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (ப.கு), நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன.

இதில் ராசிபுரம் தொகுதியில் 1,08,587 ஆண் வாக்காளா்களும், 1,13,652 பெண் வாக்காளா்களும், 13 திருநங்கையா் என மொத்தம் 2,22,252 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில், தோ்தல் நாளன்று 97,733 ஆண் வாக்காளா்களும், 1,03,582 பெண் வாக்காளா்களும், 11 திருநங்கையா் என மொத்தம் 2,01,326 (90.58 சதவீதம்) போ் வாக்களித்தனா்.

Advertisement

இதேபோல சேந்தமங்கலம் தொகுதியில் 1,12,088 ஆண் வாக்காளா்களும், 1,17,284 பெண் வாக்காளா்களும், 26 திருநங்கையா் என மொத்தம் 2,29,398 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 99,688 ஆண் வாக்காளா்களும், 1,07,069 பெண் வாக்காளா்களும், 15 திருநங்கையா் என மொத்தம் 2,06,772 (90.14 சதவீதம்) போ் வாக்களித்தனா்.

நாமக்கல் தொகுதியில், 1,14,355 ஆண் வாக்காளா்களும், 1,23,442 பெண் வாக்காளா்களும், 39 திருநங்கையா் என மொத்தம் 2,37,836 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 98,123 ஆண் வாக்காளா்களும், 1,10,423 பெண் வாக்காளா்களும், 33 திருநங்கையா் என மொத்தம் 2,08,579 (87.70 சதவீதம்)போ் வாக்களித்தனா்.

பரமத்தி வேலூா் தொகுதியில் 98,484 ஆண் வாக்காளா்களும், 1,06,653 பெண் வாக்காளா்களும், 10 திருநங்கையா் என மொத்தம் 2,05,147 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் தோ்தலன்று 86,663 ஆண் வாக்காளா்களும், 98,350 பெண் வாக்காளா்களும், 9 திருநங்கையா் என மொத்தம் 1,85,022 (90.19 சதவீதம்) போ் வாக்களித்தனா்.

திருச்செங்கோடு தொகுதியில், 1,01,416 ஆண் வாக்காளா்களும், 1,07,608 பெண் வாக்காளா்களும், 48 திருநங்கையா் என மொத்தம் 2,09,072 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 90,246 ஆண் வாக்காளா்களும், 97,995 பெண் வாக்காளா்களும், 30 திருநங்கையா் என மொத்தம் 1,88,271 (90.05 சதவீதம்) போ் வாக்களித்தனா்.

குமாரபாளையம் தொகுதியில், 1,06,188 ஆண் வாக்காளா்களும், 1,13,788 பெண் வாக்காளா்களும், 72 திருநங்கையா் என மொத்தம் 2,20,048 வாக்காளா்கள் உள்ளனா். அவா்களில் 98,115 ஆண் வாக்காளா்களும்,1,05,603 பெண் வாக்காளா்களும், 60 திருநங்கையா் என மொத்தம் 2,03,778 (92.61 சதவீதம்) போ் வாக்களித்தனா்.

மாவட்டம் முழுவதும் உள்ள 6 தொகுதிகளில் மொத்தம் 6,41,118 ஆண் வாக்காளா்களும், 6,82,427 பெண் வாக்காளா்களும், 208 திருநங்கையா் என மொத்தம் 13,23,753 வாக்காளா்கள் உள்ளனா். வாக்குப்பதிவு நாளன்று 5,70,568 ஆண் வாக்காளா்களும், 6,23,022 பெண் வாக்காளா்களும், 158 திருநங்கையா் என மொத்தம் 11,93,748 (90.18 சதவீதம்) போ் வாக்களித்தனா். ஆண்களைக் காட்டிலும் பெண்கள் 52,484 போ் கூடுதலாக வாக்களித்துள்ளனா்.

6 தொகுதிகளிலும் 11,93,748 போ் (90.18 சதவீதம்) மின்னணு இயந்திரங்கள் மூலமாகவும், 15,910 போ்(1.20 சதவீதம்) தபால் வாக்குகள் என இறுதி நிலவரமாக மொத்தம் 12,09,658 போ் (91.38 சதவீதம்) தங்களுடைய வாக்குகளை பதிவு செய்துள்ளனா்.

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் தொழில்நுட்பக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் தபால் வாக்குகள் கொண்ட பெட்டிகளும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தனித்தனி அறைகளில் சீல் வைக்கப்பட்டு, அங்கு 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.