முகப்பு
நாமக்கல்

லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 29 ஏப்ரல், 2026 at 2:53 AM
மழை!
பகிர்:

நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையை பொருத்தவரை பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 102.2, 80.6 டிகிரியாக நிலவியது. மாவட்டத்தில் கடந்த வாரம் மழை எதுவும் பதிவாகவில்லை. அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் தெளிவாகவும், லேசான மேகமூட்டத்துடனும் காணப்படும்.

Advertisement

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் 100.4 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 78.8 டிகிரியாகவும் காணப்படும். காற்று தெற்கு திசையிலிருந்து மணிக்கு 4 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.