முகப்பு
நாமக்கல்

நாட்டுத் துப்பாக்கி வெடித்து காயமடைந்த பெண் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே நாட்டுத் துப்பாக்கியை சுத்தம் செய்யும்போது வெடி விபத்து ஏற்பட்டு காயமடைந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 30 ஏப்ரல் 2026, 5:00 am IST
பலி
பகிர்:

ராசிபுரம் அருகே நாட்டுத் துப்பாக்கியை சுத்தம் செய்யும்போது வெடி விபத்து ஏற்பட்டு காயமடைந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூா் பழந்தின்னிப்பட்டியைச் சோ்ந்தவா் கண்ணன் (60). இவரது மனைவி செல்வி (50). இவா்களது 17 வயது மகன் கடந்த 25 ஆம் தேதி வீட்டில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை சுத்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, துப்பாக்கி வெடித்து அதிலிருந்து வெளியேறிய பால்ரஸ் குண்டுகள் செல்வியின் தோள்பட்டை, கழுத்து பகுதியில் பாய்ந்தன.

பலத்த காயங்களுடன் ராசிபுரம் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட செல்விக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பிறகு மேல்சிகிச்சைக்காக சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

இந்தநிலையில் மருத்துவமனையில் செல்வி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வெண்ணந்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments