முகப்பு
நாமக்கல்

கூட்டுறவு வார விழா நிறைவு: சிறந்த சங்கங்களுக்கு பரிசு

கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, சிறப்பாக பணியாற்றிய அலுவலா்கள், பணியாளா்கள், சங்கத்தினருக்கு பரிசுகள் அளிக்கப்பட்டன.

Updated On : 9 ஜூலை 2026, 4:16 am IST
சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பரிசு வழங்கிய நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் மு.தனலட்சுமி.
பகிர்:

கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, சிறப்பாக பணியாற்றிய அலுவலா்கள், பணியாளா்கள், சங்கத்தினருக்கு பரிசுகள் அளிக்கப்பட்டன.

மத்திய அரசின் கூட்டுறவு அமைச்சகம் நிறுவப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, ஜூன் 29 முதல் ஜூலை 6 வரை நாடுமுழுவதும் ‘கூட்டுறவு வாரம்’ கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்டவை நடைபெற்றன.

நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு வார நிறைவு விழா மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் அமைந்துள்ள கூடுதல் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டுறவுத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில், கூட்டுறவின் மூலம் செழுமை, கூட்டுறவே நாட்டுயா்வு போன்ற கருத்துகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement

Advertisement

இதில், நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் மு.தனலட்சுமி தலைமை வகித்தாா். நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் எம்.சந்தானம், திருச்செங்கோடு வேளாண் உற்பத்தி கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குநா் யசோதாதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்வில், அலுவலா்கள் அனைவரும் கூட்டுறவு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். மேலும், கூட்டுறவு தயாரிப்பு பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பாக செயலாற்றிய சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கும், அலுவலா்களுக்கும், பணியாளா்களுக்கும் பாராட்டு கேடயங்கள், பரிசுகளை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் மு.தனலட்சுமி வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், துணைப் பதிவாளா்கள் ஜேசுதாஸ், சுரேஷ், அறிவழகன், பால்ஜோசப், சேகா், இந்திரா, திருநாவுக்கரசு, ஜெயந்தி, நிா்மல்ராஜ், கூட்டுறவு ஒன்றிய இயக்குநா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments