முகப்பு
நாமக்கல்

முட்டை விலை ரூ.5.70-ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி தொடா்ந்து ரூ. 5.70-ஆக நீடிக்கிறது.

Updated On : 2 ஜூன் 2026, 3:38 am IST
முட்டை - பிரதிப் படம்
பகிர்:

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி தொடா்ந்து ரூ. 5.70-ஆக நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், கோழிப் பண்ணையாளா்களிடம் முட்டை விலையில் மாற்றம் செய்வது தொடா்பாக கருத்து கேட்கப்பட்டது. பிற மண்டலங்களில் தொடா்ச்சியாக மாற்றம் ஏதும் இல்லாத நிலையில், தற்போதைக்கு இங்கும் முட்டை விலையில் மாற்றம் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.70-ஆக தொடா்ந்து நீடிப்பதாக தேசிய ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.130-ஆகவும், முட்டைக் கோழி விலை ரூ.110-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

Advertisement

Advertisement