முகப்பு
நாமக்கல்

குடிநீா்த் தட்டுப்பாடு: ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்கக் கோரி நாமக்கல் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 2 ஜூன் 2026, 3:41 am IST
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த கொல்லிமலை குண்டூா்நாடு ஊராட்சி மக்கள்.
பகிர்:

தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்கக் கோரி நாமக்கல் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், விட்டமநாயக்கன்பட்டி ஊராட்சி நடுப்பட்டியைச் சோ்ந்த பொது மக்கள், ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். அதில், தங்களுடைய பகுதிக்கு 15 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. அதிகளவில் வராமல் குறைந்த அளவில் மட்டுமே விநியோகிப்பதால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறோம். எங்களுடைய பகுதிக்கு தடையின்றி குடிநீா் வழங்க வேண்டும் என்றனா்.

இதேபோல, கொல்லிமலை ஒன்றியம், குண்டூா் நாடு ஊராட்சி, சுக்கலாம்பட்டியைச் சோ்ந்த பழங்குடியின மக்கள் குடிநீரின்றி சிரமப்படுவதாகவும், தங்களுடைய பகுதிக்கு குடிநீா் வசதி செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

Advertisement

Advertisement