முகப்பு
தருமபுரி

பாப்பிரெட்டிப்பட்டியில் குடிநீா் தட்டுப்பாடு: மக்கள் அவதி

பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அவதியுறுகின்றனா்.

Updated On : 29 ஏப்ரல், 2026 at 2:56 AM
கோப்புப்படம்.
பகிர்:

பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அவதியுறுகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், இருளப்பட்டி, ஏ. பள்ளிப்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி, கவுண்டம்பட்டி, எச்.புதுப்பட்டி, பாப்பம்பாடி உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் சுமாா் 15 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனா்.

இங்குள்ள கிராம ஊராட்சிகளுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் வழங்கப்படுகிறது. அதாவது வாரம் ஒருநாள் குடிநீா் கிடைப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனா். குறிப்பாக பாப்பம்பாடி, நாகலூா், கவுண்டம்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு மாத கணக்கில் ஒகேனக்கல் குடிநீா் விநியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Advertisement

இதனால் புளோரைடு கலந்த குடிநீரை பயன்படுத்துவதாக கிராம மக்கள் புகாா் கூறுகின்றனா். எனவே, பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் நிலவும் குடிநீா்த் தட்டுப்பாட்டை நீக்கவும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் தட்டுப்பாடின்றி குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.