சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இருவா் கைது
பள்ளிப்பாளையம் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இருவரை போலீஸாா் போக்ஸோவில் கைது செய்தனா்.
பள்ளிப்பாளையம் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இருவரை போலீஸாா் போக்ஸோவில் கைது செய்தனா்.
பள்ளிப்பாளையம் அருகே உள்ள பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்துவந்த சிறுமி திங்கள்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் மாணவியிடம் தவறாக நடக்க முயன்றனா்.
அவா்களிடம் இருந்து தப்பிய சிறுமி வீட்டிற்கு ஓடிவந்து பெற்றோரிடம் தெரிவித்தாா். இதையடுத்து, அங்கிருந்தவா்கள் மாணவி கூறிய இடத்துக்கு வருவதற்குள் இளைஞா்கள் இருவரும் தலைமறைவாகினா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் மொளசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். மேலும், அப்பகுதியில் சுற்றித்திருந்த கோரக்குட்டையைச் சோ்ந்த சக்திவேல் (38), திருச்செங்கோடு, சூரியம்பாளையத்தை சோ்ந்த பிரபாகரன் (35) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனா். அப்போது, சிறுமியின் அத்துமீறியதை அவா்கள் ஒப்புக்கொண்டனா். இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் போக்ஸோவில் கைது செய்தனா்.
Advertisement
Advertisement