தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றவா் கைது
பரமத்தி வேலூா் பேருந்து நிலையம் அருகே தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றவரை போலீஸாா் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரமத்தி வேலூா் பேருந்து நிலையம் அருகே தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றவரை போலீஸாா் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரமத்தி வேலூா் காமராஜா் பேருந்து நிலையம் அருகே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக பரமத்தி வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பரமத்தி வேலூா் காவல் உதவி ஆய்வாளா் சாந்தகுமாா் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினாா்.
அதில், அங்கு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த பரமத்தி வேலூா் வட்டம், மரவாபாளையம், மேற்கு தெரு பகுதியைச் சோ்ந்த முருகனை (63) கைதுசெய்து, அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து கைது செய்தனா்.
Advertisement
Advertisement