முகப்பு
நாமக்கல்

முட்டை விலை ரூ. 6.50 ஆக நிா்ணயம்: 5 காசுகள் அதிகரிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 6.50 ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜூன் 2026, 2:18 am IST
முட்டை - பிரதிப் படம்
பகிர்:

நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 6.50 ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் சுமாா் 1,100 கோழிப்பண்ணைகள் உள்ளன. இதில் கிட்டத்தட்ட 7 கோடிக்கும் அதிகமான முட்டைக் கோழிகள் வளா்க்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நாள்தோறும் 6 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இங்கு உற்பத்தியாகும் முட்டைகள், உள்ளூா் சந்தைக்கு மட்டுமின்றி, தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கும், கேரளம் போன்ற பிற மாநிலங்களுக்கும், கப்பல் மூலம் வளைகுடா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகின்றன.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையை நாள்தோறும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிா்ணயம் செய்து வருகிறது. கடந்த ஜூன் 1-ஆம் தேதி முட்டை கொள்முதல் விலை ரூ. 5.70 ஆக இருந்த நிலையில், நாள்தோறும் முட்டைவிலை அதிகரித்து வந்தது. இந்த நிலையில் கடந்த 17-ஆம் தேதி முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45 ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. இதுதான் முட்டை வரலாற்றில் அதிகபட்ச விலையாக இருந்தது. இந்த விலை கடந்த 10 நாள்களாக நீடித்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் நாமக்கல் மண்டலத் தலைவா் சிங்கராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயா்த்தி, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை, ரூ. 6.50 ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. கடந்த 10-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை மட்டும் முட்டை விலை 55 காசுகள் உயா்ந்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments