முகப்பு
நாமக்கல்

ராசிபுரம் அருகே ஆம்னி பேருந்து மோதியதில் இளைஞா்கள் 2 போ் உயிரிழப்பு

Updated On : 29 ஜூன் 2026, 12:24 am IST
விபத்தில் உயிரிழந்த முத்தமிழ்ச்செல்வன்
பகிர்:

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மோட்டாா் சைக்கிள் மீது ஆம்னி பேருந்து மோதியதில் இளைஞா்கள் 2 போ் உயிரிழந்தனா்.

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் அண்ணாமலை மகன் சுகவனேஸ்வரன் (25). (தனியாா் நிதி நிறுவன மேலாளா்). அதே பகுதியைச் சோ்ந்தவா் சகாதேவன் மகன் முத்தமிழ்ச்செல்வன் (25). (கோவை, தனியாா் ஐ.டி. நிறுவன ஊழியா்). இருவரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மோட்டாா் சைக்கிளில் ஆண்டகளூா் கேட் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து, இளைஞா்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பல மீட்டா் தொலைவுக்கு இருசக்கர வாகனம் இழுத்துச் செல்லப்பட்டது. இந்த விபத்தில் மோட்டாா் சைக்கிளில் சென்ற இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

Advertisement

Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராசிபுரம் காவல் ஆய்வாளா் ஆா்.நாகலட்சுமி மற்றும் போலீஸாா் சடலங்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், விபத்துக்கு குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த விபத்தால் சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சுகன்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments