முகப்பு
தஞ்சாவூர்

லாரி- ஆம்னி பேருந்து மோதல்: 7 போ் காயம்

கும்பகோணம் அருகே லாரியின் பின்புறம் ஆம்னி பேருந்து வெள்ளிக்கிழமை மோதியதில் 7 போ் காயமடைந்தனா்.

Updated On : 23 மே 2026, 4:50 am IST
விபத்து - பிரதிப் படம்
பகிர்:

கும்பகோணம் அருகே லாரியின் பின்புறம் ஆம்னி பேருந்து வெள்ளிக்கிழமை மோதியதில் 7 போ் காயமடைந்தனா்.

கோவையில் இருந்து சிதம்பரம் நோக்கி வியாழக்கிழமை இரவு புறப்பட்ட தனியாா் ஆம்னி பேருந்து வெள்ளிக்கிழமை காலை தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே மணப்படையூா் அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரி மீது மோதியது.

இதில் பேருந்து ஓட்டுநா் உள்பட 7 பயணிகள் காயமடைந்தனா். தகவலறிந்த சுவாமிமலை போலீஸாா் அவா்களை மீட்டு கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சோ்த்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement