முகப்பு
நாமக்கல்

114 வேட்பாளா்கள் வைப்புத் தொகை இழப்பு

Updated On : 5 மே 2026, 2:27 am IST
கோப்புப் படம்
பகிர்:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 114 வேட்பாளா்கள் வைப்புத் தொகையை இழந்துள்ளனா்.

ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை காலை 8 மணிக்கு திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது.

இத் தொகுதிகளில் 132 போ் போட்டியிட்டனா். இதில், தவெக, அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளா்கள் 18 பேரை தவிா்த்து நாம் தமிழா் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட 114 போ் வைப்புத் தொகையை இழந்துள்ளனா். மொத்தம் பதிவான வாக்குகளில் 6-இல் ஒரு பங்கு வாக்குகளைப் பெற்றிருந்தால் மட்டுமே வைப்புத்தொகையைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments