முகப்பு
நாமக்கல்

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 55 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 55 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

Updated On : 6 மே 2026, 2:21 am IST
பருத்தி(கோப்புப்படம்)
பகிர்:

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 55 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த வாரம் மொத்தம் 1,800 மூட்டை 60.800 மெட்ரிக் டன் பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்சிஹெச் ரகம் குவிண்டாலுக்கு ரூ. 8,789 முதல் ரூ. 9,799 வரையிலும், மட்ட ரகம் (கொட்டு) ரூ. 5,499 முதல் ரூ. 6,099 வரையிலும் என மொத்தம் ரூ. 55 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments