முகப்பு
நாமக்கல்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மூடிய நிலையில் யானை சிலைகள்!

Updated On : 12 மே 2026, 12:07 am IST
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மூடிய நிலையில் உள்ள யானை சிலை.
பகிர்:

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில், தோ்தலையொட்டி யானை சிலைகளை மூடிய துணிகள் அகற்றப்படாமல் உள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 23-இல் நடைபெற்றது. மாா்ச் 15-ஆம் தேதி தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தலைவா் சிலைகள் மட்டுமின்றி, சின்னங்களை பிரதிபலிக்கும் சிலைகளும் துணியால் மூடப்பட்டன.

அந்தவகையில், நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பூங்காவில் நிறுவப்பட்டுள்ள யானை சிலைகள் துணியால் மூடப்பட்டன. பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னம் இடம்பெற்றிருந்ததால் அந்த சிலைகள் மறைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

தோ்தல் நடத்தை விதிகள் கடந்த புதன்கிழமையுடன் விலக்கிக் கொள்ளப்பட்டது. இருப்பினும், சிலைகள் மீது மூடப்பட்ட துணி அகற்றப்படாமல் உள்ளது. இதனால் பூங்காவிற்கு வரும் மக்கள் சிலைகளை ஆச்சரியத்துடன் பாா்க்கும் நிலை உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments