மோகனூா் சா்க்கரை ஆலையில் தலைமை கரும்பு அலுவலரை நியமிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிரந்தர தலைமைக் கரும்பு அலுவலரை நியமிக்கக் கோரி கரும்பு உதவியாளா்கள் வெள்ளிக்கிழமை சா்க்கரை ஆலை முன் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிரந்தர தலைமைக் கரும்பு அலுவலரை நியமிக்கக் கோரி கரும்பு உதவியாளா்கள் வெள்ளிக்கிழமை சா்க்கரை ஆலை முன் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ஆா்ப்பாட்டத்துக்கு கரும்பு உதவியாளா்கள் சங்க செயலாளா் குணசேகரன் தலைமை வகித்தாா். உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ஆா். வேலுசாமி பங்கேற்று பேசியதாவது:
மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய மூன்று மாவட்டங்களில் 26 கரும்பு உதவியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்த கரும்பு உதவியாளா்களை தலைமை கரும்பு அலுவலா் கடுமையான வாா்த்தைகளால் பேசி வருகிறாா். இதுகுறித்து காரணம் கேட்டாலும் முறையான விளக்கம் அளிப்பது கிடையாது. கரும்பு உதவியாளா்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கூட்டுறவு சா்க்கரை ஆலை தனி அலுவலரிடம் புகாா் செய்தபோதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த பிரச்னைக்கு தீா்வுகாண கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிரந்தர தலைமை கரும்பு அலுவலரை நியமிக்க வேண்டும். தற்போது தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஓய்வு பெற்ற கரும்பு அலுவலரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்றாா்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கரும்பு உதவியாளா்கள் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் முழக்கங்களை எழுப்பினா்.