வீட்டின் ஓட்டை பிரித்து நகை திருட்டு: இளைஞர் கைது
இளம்பிள்ளை அருகே வீட்டின் ஓட்டைப் பிரித்து மூன்றரை பவுன் நகையைத் திருடிச் சென்ற இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
இளம்பிள்ளை அருகே வீட்டின் ஓட்டைப் பிரித்து மூன்றரை பவுன் நகையைத் திருடிச் சென்ற இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
இளம்பிள்ளை அருகேயுள்ள வெள்ளை பிள்ளையார் கோயில் தெரு பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருபவர் அபுசாலீபு (36). இவர், செவ்வாய்க்கிழமை இரவு கடையைப் பூட்டி விட்டு அப்பகுதியில் உள்ள வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் ஓட்டைப் பிரித்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த மூன்றரை பவுன் நகை திருடப்பட்டது தெரியவந்துள்ளது.
இது குறித்து அபுசாலீபு அளித்த புகாரின் பேரில் மகுடஞ்சாவடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
காவல் உதவி ஆய்வாளர் பூபதி தலைமையிலான போலீஸார் சித்தர் கோயில் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்தின்பேரில் இளைஞரை பிடித்து விசாரித்ததில் அவர் வெள்ளை பிள்ளையார் கோயில் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (26) என்பதும், மளிகைக் கடைக்காரர் வீட்டில் திருடியதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவரைக் கைது செய்து மூன்றரை பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.