முகப்பு
சேலம்

வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு திரட்டி கட்சியினர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி வியாழக்கிழமை நடைபெறும்  பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவுக் கோரி ஆத்தூரில் அனைத்துக் கட்சியினர் புதன்கிழமை மாலை ஊர்வலமாகச் சென்றனர்.

Updated On : 5 ஏப்ரல் 2018, 7:09 am IST
பகிர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி வியாழக்கிழமை நடைபெறும்  பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவுக் கோரி ஆத்தூரில் அனைத்துக் கட்சியினர் புதன்கிழமை மாலை ஊர்வலமாகச் சென்றனர்.
பொதுவேலை நிறுத்தத்துக்கு வணிகர்கள்,  பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து திமுக நகரச் செயலர் கே.பாலசுப்ரமணியம் தலைமையில்  உடையார்பாளையம் காந்தி சிலையில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் மாவட்ட இலக்கிய அணி செயலர் முல்லை பன்னீர்செல்வம், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்கள் அ.ராஜசேகர், எம்.வேலுமணி, நூத்தப்பூரார் துரை உடையார், மாணவரணி பர்கத் அலி, நகர காங்கிரஸ் தலைவர் எல்.முருகேசன், மாவட்ட பொருளாளர் ஆர்.ஓசுமணி, சித்தமலை, ஜி.பாஸ்கர்,முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பெரியசாமி, திராவிடர் கழக மாவட்ட தலைவர் டி.வானவில் உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டு ஆதரவு திரட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments