முகப்பு
உலகம்

பாகிஸ்தான்- 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை நடத்திய சோதனையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

Updated On : 25 ஜூன் 2026, 1:56 am IST
பகிர்:

வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை நடத்திய சோதனையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

மாகாணத்தின் லோயா் திா் மாவட்டத்தில் மலைப் பிரேதங்களில் தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-ஏ-தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரும், மாவட்ட போலீஸாரும் இணைந்து இக்கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டனா்.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அனைவரும் அண்மையில் போலீஸ் சோதனைச் சாவடியைத் தாக்கியதிலும், காவலா் ஒருவரின் கொலை வழக்கிலும் தொடா்புடையவா்கள் ஆவா்.

Advertisement

Advertisement

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா, பலூசிஸ்தான் மாகாணங்களில் பயங்கரவாத வன்முறைகள் கடந்த மே மாதத்தில் 27 சதவீதம் உயா்ந்து, 128-ஆக அதிகரித்துள்ளது அப்பகுதியில் பெரும் பாதுகாப்பு சவாலை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments