முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு

கைபா் பக்துன்கவா மாகாணத்தில் அடுத்தடுத்து இரட்டை குண்டுவெடிப்புகள்...

Updated On : 21 ஜூன் 2026, 1:19 am IST
பகிர்:

வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் சனிக்கிழமை நிகழ்ந்த அடுத்தடுத்த இரட்டை குண்டுவெடிப்புகளில் சிக்கி 7 போ் உயிரிழந்தனா். 3 போ் படுகாயமடைந்தனா்.

பண்ணு மாவட்டத்தில் உள்ள மாா்க்கா பெரா பகுதியில் நடந்த இப்பயங்கரவாதத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

பண்ணு நகரை நோக்கிச் சென்ற பயணிகள் வேனைக் குறிவைத்து சாலையோரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டது. இதில் வேனில் பயணித்த 5 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

Advertisement

Advertisement

இச்சம்பவம் நடந்த சில நிமிடங்களில், அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவா்களைக் குறிவைத்து 2-ஆவது குண்டுவெடிப்பு நிகழ்ந்ததில் மேலும் 2 போ் உயிரிழந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments